செவ்வாய், 17 மார்ச், 2020

கோவில்பட்டி மாணவ கண்மணிகள் கொண்டாடும் ..சிங்க பெண் ஆசிரியை மங்களேஸ்வரி!!!

புரட்சி புதுமை படைக்கும் சிங்கப்பெண்ணே...என்று மாணவிகள் கொண்டாடிவரும் கோவில்பட்டி 
அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியை மங்களேஸ்வரி....!!!

இது பற்றி ஆசிரியை மங்க ளேஸ்வரி அவரிடம்  பகிர்ந்தறிந்த சுவாரஸ்சிய..
செ ய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் திருமதி. மங்களேஸ்வரி எனும் ஆங்கில மொழி பாடம் கற்பிக்கும் ஆசிரியை 17. 12. 2012 இல் தகுதி தேர்வின் மூலம் தனது 39வது அகவையில் அரசுப் பணியில் சேர்ந்தவர்.

இடைப்பட்ட. காலத்தில் 
 2015ஆம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லாததால் தூத்துக்குடியில் இருந்து பள்ளிக்கு தானே காரை ஓட்டிச் செல்வதுடன்,
அந்த. காலகட்டத்திலும் ஏழு வருட அரசுப்பள்ளி பயிற்றுவித்தலில் ICT பயன்படுத்தி பாடம் நடத்துவதும், மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக, தன் சொந்த செலவில் Project Display என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துவதும் வழக்கம். தனியார் பள்ளிகளைப் போலவே, அரசு பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளையும், ஆங்கில மொழி கற்கும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் விதமாகவே இந்த நிகழ்வு இருக்கும். 

அதில் மாணவர்கள் அடையும் சந்தோஷமே இவரின் சந்தோஷம் என்கிறார் ஆசிரியை மங்கேஸ்வரி.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் மட்டுமே கல்வி பயின்ற இவர், தன் திருமண வாழ்விற்கு பின்னரே, கணவரின் உந்துதலால் பி.ஏ, எம்.ஏ, பி.எட் மற்றும் எம்.பில் ஆகிய பட்டங்களைத் தொலைதூரக் கல்வி மூலம் பயின்றுள்ளார். 

தன்னுடைய பள்ளி வாழ்க்கையில், ஒரு பாடத்தை எவ்வாறு பயில வேண்டும் என்று கற்றுத்தந்த ஆசிரியர்களாலும், எவ்வளவு இடர் வந்த போதிலும் மனவலிமை குன்றாத தாயின் மூலம் கிடைத்த மனவலிமை
யும் தான் Self Learning அதாவது சுயகற்றல் என்பது தனக்கு சாத்தியமாகியது. என்கிறார் 

எனவே தன்னிடம் பயில வரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சுயகற்றல் என்பதை ஊக்குவிக்கும் விதமாக தன்னால் இயன்ற வரை ஆங்கில மொழி அறிவை வளர்த்து, அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்க விரும்புவதாக கூறுகிறார்.  '
மெட்ரிக் பள்ளிகளில் பணி புரிந்த போதும் இவர் அங்குள்ள மாணவர்களை இவ்விதமே செய்துள்ளார். அங்குள்ள மாணவ மாணவியர்களின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக MAD ( Make A Difference)  எனும் புத்தகத்தை அச்சிட்டு, அவர்களுக்கு பரிசாக வழங்கியவர் .தற்போது அரசுப் பள்ளியிலும் அதனை தொடர்ந்து செய்து வருகின்றார்.  

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் என்ற வார்த்தையே  பெருத்த அச்சுறுத்தலாக இருந்த போதிலும் ,அதை எளிமைப்படுத்தி, உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்து, அதனை வீடியோ எடுத்து, பிள்ளைகளுக்கு காண்பிப்பதன் மூலம், அவர்களின் ஆர்வத்தை தூண்டி , அவர்களுக்கு Chart, Marker, Sketch, Fevical என  தேவைப்படும் அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொடுத்து, ஒரு தூண்டுகோலாக விளங்குகின்றார். 

ஒவ்வொரு வருடமும் நடத்தும் நிகழ்வில் ஏதாவது ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொள்கின்றார். ஆரோக்கியம் -உணவே மருந்து, டெங்கு விழிப்புணர்வு, சிறுதொழில்கள் , வீட்டு தோட்டம் அமைத்தல், சுகாதாரம்,  பிளாஸ்டிக் தடை,  என எடுத்துக் கொள்வது வழக்கம். '

இந்த வருடம் பாரம்பரிய விளையாட்டுகள் என்ற தலைப்பை எடுத்து பல்லாங்குழி, தாயம், ஒற்றையா இரட்டையா, பரமபதம் போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் செய்யும் 12 செயல்பாடுகளையும் Chart ல் ஒட்ட வைத்து, அதனை மதிப்பீடு செய்து, வகுப்பறையின் சுவர்கள் முழுவதும் அலங்கரிக்கப்படுகிறது. '


இதுவரை 2 Fast 2 B Curious,  Radiant Recital, Downpour,  Expo  '18, February Festival என்ற பெயர்களில் இந்த நிகழ்வுகளை நடத்தியுள்ளார். 

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு செயல்திறன்களின் அடிப்படையிலும், பங்கேற்றமைக்காகவும் அநேக பரிசுகள் வழங்கப்படுகிறது. 


அதில் தன்னிடம் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் ஆங்கிலத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்குவதால், பிற மாணவியர்களுக்கும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வருவதாகவும் கூறுகின்றார் .


அவரிடம் தற்போது பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டபோது ,எங்கள் ஆசிரியர் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதாலும், மீண்டும் மீண்டும் வாசிப்பு பயிற்சி அளிப்பதாலும் எங்களால் எளிதாக ஆங்கிலம் பயில முடிகின்றது . வாசிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனது லேப்டாப்பில் PPT Slide களில் ஆசிரியர் வாசிப்பதை ரெக்கார்ட் செய்து ,அவர் கூட நாங்கள் வாசிப்பது போல் இடைவெளி விட்டு, வாசிக்க செய்கிறார் .ஆதலால் அனைவரும் வாசிக்க கற்றுக் கொள்கின்றோம். இந்த வருட நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் பல்லாங்குழி ,தாயம், பரமபதம், தட்டாங்கல், ஒற்றையா இரட்டையா போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தோம். அத்துடன் இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும் படிக்கவைத்து, வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என்று கற்றுத் தந்ததும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. நாங்கள் 40 பேரும் மைக் முன்பு நின்று பேசும் கூச்சம், பயம் போன்றவை இல்லாமல் பங்கெடுக்க உறுதுணையாக இருந்ததால் எங்களுக்கு எங்கள் ஆங்கில ஆசிரியரை மிகவும் பிடிக்கும். 

எங்களுக்கு நிறைய பரிசுகள் தந்து ஊக்குவித்ததால் மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் Tenses பழகும் போது அதையும் விளையாட்டாக பழக வைத்தது மிகவும் பிடித்திருந்தது என்று பவானி ஸ்ரீ , தரணி, சுபஸ்ரீ, சக்திபிரியா ஆகிய மாணவியர் கூறினர். மாணவிகளும் தினமும் எங்களை வட்டமாக நிறுத்தி வைத்து எல்லோரும் பயில வேண்டும் ,எல்லோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் பரிசு வாங்கித் தந்ததும், எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என சிரித்த முகத்துடன் கூறினர் .

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மாணவிகளின்  பெற்றோரில் ஒருவரான திருமதி கலைச்செல்வி (ஸ்ரீ கணேஷ்கா )என்ற மாணவியின் தாயார் கூறும் பொழுது என்னுடைய மகள்களில் இரண்டு மகள்கள் இந்த ஆசிரியரிடம் தான் உள்ளனர். இரண்டு வருடமும் இந்த நிகழ்வு நடந்துள்ளது .இந்த வருடம் எனக்கு அதை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இளைய மகள் படிப்பில் ஆர்வம் குறைந்தவராக இருந்தாலும், இவர்களால் விடுமுறை நாட்களில் கூட செயல்பாடுகள் செய்வதும், வாய்விட்டு ஆங்கிலம் வாசிப்பதும் அவளுக்கு சாத்தியமாக்கியது. எல்லா பிள்ளைகளையும் ஊக்கப்படுத்துவது பார்க்கும்பொழுது, அரசுப்பள்ளியில் இப்படி ஒரு ஆசிரியர் என் பிள்ளைகளுக்கு கிடைத்தது எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறினார். 

அடுத்ததாக பேசிய திருமதி மகாலட்சுமி( சக்தி பிரியா என்ற மாணவியின் தாயார்) கூறுகையில் இந்த ஆசிரியர் மாணவர்களிடம் தூண்டிய ஆர்வம் என்னை ஆச்சரியப் படுத்துகிறது .என் மகள் ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் ஏதாவது ஆங்கில பாடம் சம்பந்தமாக எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பாள்.

 ஒரு நாள் ஒரு பானையில் படம் வரைந்து கொண்டிருந்தாள். என்ன என்று கேட்டபோது, மாநிலங்களின் பண்டிகைகள் பற்றி பேசப் போகிறேன் என்றாள். அப்போது எனக்கு வியப்பாக இருந்தது அதை எல்லாம் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

 அவ்வளவு தூரத்திலிருந்து காரில் வந்து, ஒரு வகுப்பறையில் இவ்வாறு ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து, மாணவர்களை ஆர்வமுடன் பங்கேற்க வைத்து ,எங்களையும் கௌரவப்படுத்தி, மாணவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஆசிரியை மங்களேஸ்வரி உண்மையிலேயே ஒரு சிங்கப்பெண்தான் என்கிறார்.  

இவர் ஒவ்வொரு வாரமும் எழுதும் Lesson Plan நோட்டும், செயல்பாடுகள் நோட்டும் செய்தித்தாளில் வெளிவந்த படங்கள் அல்லது அவரே வரைந்த படங்கள் நிறைந்ததாக இருக்கின்றது. மாணவிகள் செயல்பாடுகளை இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்காக தானே அவ்வளவு செயல்பாடுகளையும் செய்து ,அந்த நோட்டில் தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்தும் பெற்று வைத்துள்ளார். நாளிதழ்களில் வரும் Articles பாட சம்பந்தமாக இருப்பின் உடனே அதை எடுத்து ,அதில் வரும் குறிப்புகளை தன் நோட்டில் ஒட்டி வைத்துள்ளார்.  

Grammar தலைப்புக்கு எழுதும் போது வாக்கியம் அமைக்கவும் கூட, நாளிதழ்களில் உள்ள படங்களை ஒட்டி, வேறு புத்தகங்களில் உள்ள வாக்கியங்களை அப்படியே பயன்படுத்துவதற்கு பதிலாக ,மாணவர்கள் அந்த படத்தை பார்த்து தமிழில் வாக்கியங்களை சொல்ல வைத்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்து அந்த வாக்கியங்களை பயன்படுத்துகிறார். மதியம் ஒரு மணி முதல் 1 மணி வரை பிள்ளைகளுடன் இருந்து ,ஆங்கில நாளிதழ்களில் Unfamiliar Words என பிள்ளைகள் நினைக்கும் வார்த்தைகளை எடுத்து Dictionary கொண்டுவரச் செய்து கொண்டு வராத பிள்ளைகளுக்கு தன் மொபைல் போனை தந்து Google Search ல் தேட வைத்து எழுத வைப்பதால் Dictionary Referring சொல்லிக் கொடுப்பதுடன், அவ்வப்போது மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கின்றார். 

குறிப்பாக இவர் வகுப்பில் Vocabulary மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆங்கிலத்தில் Tenses படிப்பதற்கு தான் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதனை Personal Pronouns Singular மற்றும் Personal Pronouns Plural என்ற வரிசையில் Irregular Verbs ஐ எல்லா Tense வகைகளிலும் பயன்படுத்த Action உடன் கற்றுத்தருகிறார்.


மனைவி ,தாய், ஆசிரியர் ,ஓட்டுனர் என்ற பரிமாணங்களைத் தாண்டி விரைவில் எழுத்தாளராகவும் தான் பரிணமிக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் திருமதி மங்களேஸ்வரி .
பட்டதாரி ஆசிரியை (ஆங்கிலம்) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக