ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

இனி தூத்துக்குடி புது பஸ்ஸாடாண்ட் உள்ளே ஆம்னி பஸ்கள் ! !!தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி நகரின் வாழ்க்கை தரம் குறித்து பொது மக்கள் கருத்து ஆய்வு

இனி தூத்துக்குடி புது பஸ்ஸாடாண்ட் உள்ளே ஆம்னி பஸ்கள் !!தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி நகரின் வாழ்க்கை தரம் குறித்து பொது மக்கள் கருத்து ஆய்வு நடத்தப்படுகிறது.

 இதுகுறித்த கணக்கெடுப்பு பிப்1 முதல் 29ம் தேதி வரை நடத்தப்படுவதாக தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி மேலாண்மை  இயக்குநரும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளருமான ஜெயசீலன் தெரிவித்தார்.இதுகுறித்து  தூத்துக்குடி மாநாகராட்சி ஆனையாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்பாடு செய்ய இந்தியாவில் 100 சீர்மிகு நகரங்களை (Smart City) உருவாக்க மத்திய அரசால் சீர்மிகுநகரம் (Smart City) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்பேரில் தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளை சீர்மிகுநகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சியை சீர்மிகு நகரமாக தேர்வு செய்து, அரசாணையிடப்பட்டு பல்வேறு பணிகள் ரூ.930.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.நகரின் வாழ்க்கை தரம் குறித்து பொது மக்கள் கருத்து ஆய்வு நடத்தப்படுகிறது. 

இந்த மதிப்பீடானது மாநகர பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது குறித்த கருத்து தெரிவிப்பதில் நேரடியாக பங்கு கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும். மேலும் இந்த கருத்தாய்வு குறித்த கணக்கெடுப்பு 01/02/2020 முதல் 29/02/2020 வரை நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பானது மாநகரில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், பூங்காக்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகிய முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள் நிறுவுதல், வண்ண சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் அரசு சுவர்களில் விளம்பரம் செய்தல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு மாநகராட்சியால் அறிவிப்பு செய்யப்படுகிறது.இந்த கருத்து ஆய்வில் மாநகர மக்கள் மேற்படி விளம்பரங்களில் உள்ள QR Scanner code ஐ தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பின்னர் Eol2019.org/citizenfeedback இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்துதல் அல்லது இணையதளபக்கத்தில் Eol2019.org/citizenfeedback என்ற இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, இந்த இணைய பக்கத்தில் குடிமக்களின் கருத்து என குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தில் தமிழ்நாடு மாநிலம் எனவும், தூத்துக்குடி நகரம் எனவுத் தேர்வு செய்து கருத்து கணக்கெடுப்பில் பங்கு கொள்ளலாம்.மேலும் மேற்படி இணையத்தில் பெயர், வயது, செல்போன் எண், பாலினம் குறித்த தகவல்களை பதிவு செய்து பின்னர் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்களின் வாழ்க்கைத்திறன், சமூக மேம்பாடு,குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு, பெண்கள் பாதுகாப்பு, சீரானகுடிநீர், மின்சாரம் விநியோக பயன்பாடு போன்ற 24 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதில்களை தேர்வு செய்து பதிவிட வேண்டும். இந்த தகவல்கள் மூலம் தூத்துக்குடி சீர்மிகு நகர திட்டப்பணிகளை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பணிகளை சீராக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள், மாணவ, மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வு அமைப்புகள் இந்த கணக்கெடுப்பின் மூலம் உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை மேற்படி குறியீடுகளில் பதிவுகள் மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.தூத்துக்குடி நகரி்ல் ரூ.600 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 

அடுத்து தூத்துக்குடி பழைய பஸ்ஸாடாண்ட் பகுதியில் மேம்படுத்தபட்ட அடுக்குமாடியுடன்அதி நவீன  முறையில் பேருந்துநிலையம் கட்டப்பட்டு வருகிறது அங்கே இதுவரை பஸ் டிப்போ காலி செய்யப்படாமல் சிக்கல் இருக்கிறது. அதற்காக தூத்துக்குடி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் டிப்போ -வுக்கு  இட ஒதுக்கீடு செய்து விட்டோம். அந்த பைலை அரசுக்கு அனுப்பி பதிலுக்கு காத்திருக்கிறோம். மேலும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் இருசக்கர வாகன பாதுகாப்பு பின்புறப் பகுதியில் வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்கள் நிறுத்திடவும். அவர்களுக்கு புக்கிங் கவுண்டர் வாடகை இடமும் ஒதுக்கி செயல்படும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.மேலும், தூத்துக்குடி நகரில் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் பணிகள் நடைபெற்றது வருகிறது. தற்போது  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 10 கிமீ சாலையில் நிலத்தடியிலேயே மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது என தூத்துக்குடி மாநகராட்சி ஆனயைாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக