வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் தமிழர் விடுதலைக்களம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

 ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக்
தமிழர் விடுதலைக்களம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தடை இல்லை எனில் போராட்டத்தை தமிழர் விடுதலைகளம் முன்ெடுக்க  ேரவதாக  தெரிவித்துள்ளது.
இது குறித்து பத்திரிகை செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம்
ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் புறம் வருகிற 23-2-2019 அன்றுஅரசின் அனுமதியோடு தனிநபர்களின் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க
இருப்பதாக அறிகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் என்னும் மாட்டு
வண்டி ஓட்ட பந்தயம் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது என்பது அனைவரும்
அறிந்ததே.

                               Video
தற்போது
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மாடுகளும் மாடுபிடி
வீரர்களும் இல்லாத நிலையில் மதுரையில் இருந்து மாடுபிடி வீரர் களையும்
ஜல்லிக்கட்டு மாடுகளையும் பொருட்காட்சி நடத்துவது போல் கொண்டுவந்து
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி தனி நபர்களால் நடத்துவது
என்பது உள்நோக்கம் கொண்டதாகவே அறிகிறோம்.

ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழ் சமூக மக்களிடையே சமூக
நல்லிணக்கத்திற்கு எதிரான சமூக விரோதிகளால் சாதியின் பால் முரண்கள்
தீட்டப்பட்டு படுகொலைகள் நடந்து வருகிறது இந்நிலையில் ஜல்லிக்கட்டு
போட்டிகளில் பார்வையாளராக கலந்து கொள்ளும் மக்களிடையே சாதி ரீதியான
முரண்பாடுகள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றால்
வாழும் மக்களின் மனநிலைகள் வேறு பார்வைகள் வேறு திருநெல்வேலி தூத்துக்குடி
மாவட்ட மக்களின் மனநிலைகள் வேறு பார்வைகள் வேறு ஸ்ரீவைகுண்டம் பகுதியில்
சாதியில் பிரச்சினை ஏற்பட்டால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்
பதற்றம் தொற்றிக் கொள்ளும் நிலையே இருந்து வருகிறது.

ஆகவே மேன்மை
பொருந்திய தாங்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு
போட்டிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம்
பகுதிகளில் வாழும் தமிழ் சமூகங்களின் நலன் கருதியும் குறிப்பாக தேவர்
தேவேந்திரகுல வேளாளர் சமூக நல்லிணக்கம் கருதியும் தமிழகம் சார்பிலும்
வேண்டுகிறோம்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்
தமிழர் விடுதலை களம் சார்பில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் சார்பாக
போராட்டங்களை முன்னெடுப்போம் என இதன் மூலமாய் தெரிவித்துக்
கொள்கிறோம்.
என இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஜெயராஜ் பாண்டியன்
தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள்
வழக்கறிஞர் மாரியப்பன்,
-ராஜேஷ்
மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர்
ரஞ்சித் பாண்டியன்
வழக்கறிஞர் காளிராஜ்
மங்கள் ராஜ் பாண்டியன்
நெல்லை மாவட்ட செயலாளர்கள்
முத்துக்குமார்
மணிப் பாண்டியன்
மண்டல செயலாளர்
நெல்லை சரண்
நிர்வாகிகள்
வேல் முருகன் பிரதாப் சீவல் பாண்டியன்
ஆகியோர் உடன் இருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக