சனி, 5 அக்டோபர், 2019

தமிழக அளவில் துப்புறியும் போட்டியில் தூத்துக்குடி போலீஸ் மோப்ப நாய்கள் 2 இடம் !!! எஸ.பி பாராட்டு!!!

தமிழக அளவில்
துப்புறியும் போட்டியில் தூத்துக்குடி போலீஸ் மோப்ப நாய்கள் 2 -வது இடம் !!!
 எஸ.பி பாராட்டு!!!

தமிழக காவல்துறை மோப்பநாய் மாநில
படைப்பிரிவுகளுக்கிடையே சிறப்பு பயிற்சி துப்புறியும் போட்டி  நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவைச் சேர்ந்த நாய்கள்
கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்து கேடயம் வென்றுள்ளது


தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள்
பாராட்டினார்


 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறை மோப்ப
நாய்ப்பிரிவுகளுக்கிடையே பல்வேறு துப்பு துலக்கும் போட்டிகள் சென்னையில் கடந்த 23.09.2019 முதல் 27.09.2019 வரை 5 நாட்கள் நடைபெற்றது

இப்போட்டியில் தமிழக அளவில் தூத்துக்குடி மோப்பநாய்ப்படைப்பிரிவைச்
சேர்ந்த போதைப்பொருள் பற்றி துப்பு துலக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்
அர்ஜீன்", குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள்
ஜியா" மற்றும் "சுனோ" ஆகிய 3 நாய்களும், கலந்து கொண்டு
தமிழக அளவில்
2வது இடத்தைப் பிடித்து கேடயம் வென்றுள்ளது
இது தவிர தனிப்பட்ட (Individual Competition) முறையில் போதைப்
பொருள் பற்றி துப்பு துலக்குவதில் தூத்துக்குடி மோப்ப நாய்ப்படைப்பிரிவைக்
சேர்ந்த நாய் "அர்ஜின்" தமிழக அளவில் 3வது இடத்தைப்பிடித்து வெற்றி
பெற்றுள்ளது
வெற்றி பெற்ற தூத்துக்குடி காவல்துறை மோப்பநாய் படைப்பிரிவைச்
சேர்ந்த நாய்களையும், அதன் பயிற்சியாளர்களான சார்பு ஆய்வாளர்கள்
மாடசாமி, அந்தோணி அருள் ராஜ் முதல் நிலைக் காவலர்கள் ஆனந்த
சிவக்குமார், மகேஷ்ராஜா, காவலர்கள் நல்ல தம்பி என்ற கரேஷ், மற்றும்
பாலகப்பிரமணியன் ஆகியோரையும் மாவட்ட காவல் கணர்காணிப்பாளர் திரு
அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பாராட்டினார்,
அப்போது மாவட்ட
குற்ற ஆவண காப்பக காவல் துனை காணிப்பாளர் திரு. சண்முகம்
உடனிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக