தூத்துக்குடியல் செல்போன் திருடியதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது
இது பற்றி விவரமாவது
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம் பகுதியில் உள்ள தூத்துக்குடி, குமாரரெட்டியாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மூர்த்தி(19). இவர் 11.09.2019 அன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும் பொழுது பைக்கின் டேங்க் கவரில் வைத்து இருந்த இரண்டு செல்போன்களும் காணாமல் போயிருந்தது தெரிந்தது.
இது குறித்து மூர்த்தி அளித்த புகார்செய்தார் .
சிப்காட் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்ததில் தூத்துக்குடி, பந்துகரையைச் சேர்ந்த முனியசாமி மகன் பெருமாள்சாமி(25) மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் வெற்றிவேல்(28) ஆகியோர் செல்போன்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து பெருமாள்சாமி மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் திருடப்பட்ட ரூபாய் 10/000/- மதிப்பிலான 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட் டது
Next NeயS
*தூத்துக்குடி மாவட்டம் :13.09.2019
*சூரங்குடி காவல்நிலையம்*
*சூரங்குடி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெத்தையா மகன் முனீஸ்வரன்(26). இவருடைய பெரியம்மா அதே பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மனைவி உமையம்மாள்(65).
உமையம்மாளுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாததால் உங்களது வீட்டை தனக்கு தருமாறு முனீஸ்வரன் கேட்டுள்ளார். இதற்கு உமையம்மாள் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் 12.09.2019 அன்று உமையம்மாளிடம் தகராறு செய்து தவறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உமையம்மாள் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தார்.
Next news
தூத்துக்குடி மாவட்டம் :13.09.2019*
ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்*
கச்சேரி தளவாய்புரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள் @ குட்டியம்மாள்(35). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.*
இந்நிலையில் 11.09.2019 அன்று அதே பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் காசி பாண்டி(29) என்பவர் பேச்சியம்மாள் @ குட்டியம்மாளின் கடையில் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து பேச்சியம்மாள் @ குட்டியம்மாள், காசி பாண்டியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் காசி பாண்டி பேச்சியம்மாள் @ குட்டியம்மாளிடம் தவறாக பேசி தகராறு செய்து கடையில் உள்ள முறுக்கு பாட்டில் முட்டாய் பாட்டில்களையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.*
இதுகுறித்து பேச்சியம்மாள் @ குட்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியராஜன் வழக்கு பதிவு செய்து காசி பாண்டியை கைது செய்தார்.
Next News
தூத்துக்குடி மாவட்டம் :13.09.2019
நாசரேத் காவல் நிலையம்*
நாசரேத், திருமறையூர் சர்ச் காம்பவுண்டை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகேஷ்(35). இவருடைய மனைவி ஜான்சி ஏஞ்சலின்(29).*
மகேஷ் தினமும் குடித்துவிட்டு ஜான்சி ஏஞ்சலினிடம் தகராறு செய்து குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து ஜான்சி ஏஞ்சலின் நாசரேத், பிள்ளையன்மனை பகுதியில் உள்ள தனது தங்கையான ஜாய்ஸ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.*
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஜான்சி ஏஞ்சலினின் தங்கை வீட்டிற்கு சென்று, ஜான்சி ஏஞ்சலினிடம் தவறாக பேசி தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.*
இதுகுறித்து ஜான்சி ஏஞ்சலின் அளித்த புகாரின்பேரில் நாசரேத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அங்கப்பன் வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்தார்
Next news
நாசரேத் காவல் நிலையம்*
நாசரேத், வெள்ளமடம், இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்ன தம்பி மகன் நடராஜன்(38). இவருடைய மனைவி அந்தோணி புஷ்பம்(30).*
12.09.2019 அன்று நடராஜன் குடிபோதையில் தனது மனைவி அந்தோணி புஷ்பத்திடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.*
இதுகுறித்து அந்தோணி புஷ்பம் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. மணி வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக