வியாழன், 26 செப்டம்பர், 2019

மகளிர் சுய உதவி பெண்ணுக்கு கெரலை மிரட்டல் கோவில்பட்டியில் ஒருவர் கைது!!!

மகளிர் சுய உதவி பெண்ணுக்கு கொலை மிரட்டல் கோவில்பட்டியில் ஒருவர் கைது!!!

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

எட்டையாபுரம் காட்டுராமன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கிருஷ்ணவேணி-31(மகளிர் சுய வேலைவாய்ப்பு திட்ட-கணக்காளர்) இவர் 24.09.2019 அன்று கோவில்பட்டி பழைய பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவரிடம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் ஜெயபாலன்(38) என்பவர் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.*

 இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் திருமதி. சத்யா வழக்கு பதிவு செய்து ஜெயபாலனை கைது செய்தார்.

Next News


   தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம்

தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி தலைமையிலான போலீசார் 25.09.2019 அன்று தூத்துக்குடி கணேசபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டடார்

அப்போது தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வின் @ செல்வம்(69) என்பவர் சட்டவிரோதமாக சுமார் 1.200 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.*
இதனையடுத்து உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார்  வழக்கு பதிவு செய்து செல்வின் @ செல்வத்தை கைது செய்தார்.


Next News
தூத்துக்குடி மாவட்டம் : 26.09.2019*

சூரங்குடி காவல் நிலையம்


தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களான அந்தோணி ஜெபமாலை ராகினி (32), அவரது கணவர் ஆரோக்கியம்(34) மற்றும் அந்தோணி ஜெபமாலை ராகினியின் சகோதரி கணவர் ஜெயசிங் (29) ஆகியோர் 24.09.2019 அன்று கீழ சண்முகபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஜெபமாலை ராகினியின் உறவினரான அந்தோணிராஜ் மகன் ஆமோஸ்ராஜா(25) என்பவர் மதுபோதையில் அந்தோணி ஜெபமாலை ராகினியிடம் தகராறு செய்துள்ளார். இதற்கு அவர் கேள்வி கேட்ட போது ஆத்திரமடைந்த ஆமோஸ்ராஜா, அவரது சகோதரர் அகஸ்டின்ராஜா(24) மற்றும் ஆமோஸ்ராஜாவின் உறவினரான இராமநாடு மாவட்டம் நரிப்பையூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முனுசாமி(23) ஆகியோர் சேர்ந்து ஆரோக்கியம் மற்றும் ஜெயசிங்கை கம்பு மற்றும் கையால் தாக்கியுள்ளனர்.

 இதுகுறித்து அந்தோணி ஜெபமாலை ராகினி அளித்த புகாரின்பேரில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கராஜ்  வழக்குப்பதிவு செய்து ஆமோஸ்ராஜா, அகஸ்டின்ராஜா மற்றும் முனியசாமி ஆகியோரை கைது செய்தார்.

Next News


தூத்துக்குடி மாவட்டம் : 26.09.2019

ஏரல் காவல் நிலையம்


மொட்டைநாதன்விளையை சேர்ந்தவர் முத்துலட்சுமி-65 (w/o கற்குவேல்). இவருடைய மகன் கதிர்வன் என்பவர் சிறுத்தொண்டநல்லூரைச் சேர்ந்த சேர்மக்கனி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில் கதிர்வன்  தனது தங்கை திருமணத்திற்காக சேர்மக்கனியின் மூலம் தாயார் முத்துலட்சுமியின் வீட்டை  ரூபாய் 4,00,000/- ற்கு அடமானம் வைத்துள்ளார்.*

இதனையடுத்து அடமான பணத்தை திரும்ப செலுத்த வேண்டி, கதிர்வன் பேருரை சேர்ந்தவர்களான தர்மர் மகன் காசிபாண்டி(29), காசி மகன்  சாத்தகுட்டி(43), சிவசுப்பு மகன் சண்முகராஜா(29), வெள்ளபாண்டி மகன் வைகுண்டம்(38) முருகன் மகன் சுப்புராஜ்(27) மற்றும் வடக்கு தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த வேலு மகன் சிவனாண்டி(34) ஆகியோருடன் சேர்ந்து 24.09.2019 அன்று முத்துலட்சுமியிடம் தவறாக பேசி வீட்டை காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

   இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. முத்துவீரப்பன்  வழக்குப்பதிவு செய்து காசிபாண்டி, சாத்தக்குட்டி, சண்முகராஜா, வைகுண்டம், சுப்புராஜ் மற்றும் சிவனாண்டி ஆகிய 6 பேரை கைது செய்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக