தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் தாலுகா சிவகளை பரும்பு தெருவைச் சேர்ந்த காந்தி மகன் முத்துக்குமார் (37). இவர் மீது
ஆழ்வார்திருநகரி, சாயர்புரம், சிவந்திபட்டி மற்றும் திருநெல்வேலி தாலுகா ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்குகளும், மேலும் குரும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு குரும்பூர் காவல் நிலைய போலீஸார் முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பட்டாணி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி முத்துக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் குரும்பூர் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. பட்டாணி, எதிரி முத்துக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக