செவ்வாய், 17 செப்டம்பர், 2019

தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வர் குண்டர் சட்டத்தில் கைது.!!!


தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர்
சட்டத்தில் கைது.!!!

தூத்துக்குடி, முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்த தங்கமுனியசாமி மகன்
தினேஷ் (20) என்பவர் 

இவர் மீது கடந்த 19.10.2018 அன்று தூத்துக்குடி எஸ் எஸ்.
பிள்ளைத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் மஹாராஜா (19/18) என்பவரை
தூத்துக்குடி மீன்பிடித்துறை முகத்தில் கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு
கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.


ஆகவே தினேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ..
தூத்துக்குடிவடபாகம் காவல் ஆய்வாளர் 
திரு. பார்த்திபன், தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்களுக்கு
அறிக்கை செய்தார்,


பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
பரிந்துரையின் பேரில் ..
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி,
இ.ஆ.ப. அவர்கள் தினேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய
உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் ..
தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர்
மேற்படி எதிரி தினேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Next News

தூத்துக்குடி மாவட்டம் :17.09.2019

 நாலாட்டின்புதூர் காவல் நிலையம்*

கடலையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் பாலசுப்ரமணியன்(49). இவரது மாமியார் அதே பகுதியை சேர்ந்த அமிர்தம்(70).

பாலசுப்பிரமணியனின் மகள் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அமிர்தம், பாலசுப்ரமணியனின் மகளுக்கு சாப்பாடு கொடுத்து விடாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் மனைவி, சுப்புலட்சுமியை அமிர்தம் திட்டியுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த  பாலசுப்பிரமணியன் 16.09.2019 அன்று தகராறில் ஈடுபட்டு அமிர்தத்தை உலக்கையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.*

 இதுகுறித்து அமிர்தம் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுகதேவி  வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.


தூத்துக்குடி மாவட்டம் :17.09.2019*

 தட்டப்பாறை காவல் நிலையம்

 மேல தட்டப்பாறை இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வெற்றிவேல்(26). இவர் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்

இவர் 15.09.2019 அன்று வேலையை முடித்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பும்போது மேல தட்டப்பாறை வடக்கு தெருவைச் சேர்ந்த சிவபெருமான் மகன் மகாராஜா(20) மற்றும் மேல தட்டப்பாறை S.S காலனியைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஹரிகரன்(20) ஆகியோருக்கு வெற்றிவேல் பைக்கில் செல்லும் போது கை காமித்து விட்டு சென்றுள்ளார்.*

 இதை விரும்பாத மகாராஜா மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வெற்றிவேலிடம் தகராறு செய்து கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜீவன் மரகதம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

Next News

தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2019*

ஏரல் காவல் நிலையம்
உமரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்கண்ணு என்ற வெள்ளத்துரை(73) இவரது மகன் கோட்டமுத்து(47). 16.09.2019 அன்று கோட்டமுத்து மதுபோதையில் அவரது தந்தையான வேல்கண்ணு என்ற வெள்ளத்துரையிடம் தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வேல்கண்ணன் என்ற வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. முத்து வீரப்பன்  வழக்கு பதிவு செய்து கோட்டால முத்துவை கைது செய்தார்.*

Next News

 தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2019*

எப்போதும்வென்றான் காவல்நிலையம்

எப்போதும்வென்றான் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யம்மாள்(42), இவரது கணவர் காட்டுராஜா(40). காட்டு ராஜா வேலைக்கு செல்லாமல் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.*

இதுகுறித்து அய்யம்மாள் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காட்டுராஜா (16.09.2019 அன்று) அய்யம்மாளிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

*இதுகுறித்து அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ் Cr.No. 69/19  u/s 294(b), 506(ii) IPC and 4 of TNPHW Actஇன் கீழ் வழக்குப்பதிவு செய்து காட்டு ராஜாவை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக