புதன், 18 செப்டம்பர், 2019

கமல்ஹாசனின் இந்தியன் 2 புதிய தகவல்கள்

கமல்ஹாசனின் இந்தியன் 2
புதிய தகவல்கள்!!!

கடந்த 1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வெளியான படம் இந்தியன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கமல்ஹாசனின் வயதான சேனாதிபதி தோற்றத்தில் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்துள்ளனர்.


கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை ரகுல் பிரீத் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலையில் இருந்ததால் இந்தியன்-2 படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொள்ளவில்லை. அவரை தவிர்த்து மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது கமல்ஹாசனும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றிலும் படப்பிடிப்பை நடத்தினர். 

         சேனாதிபதியாக வரும் கமல்ஹாசன் அந்த ஓட்டலுக்கு நடந்து செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். 

இதை தொடர்ந்து சில வாரங்கள் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. அதன்பிறகு கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு செல்கிறார்கள். வெளிநாட்டில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது.
          
          இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மத்திய ⛓சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக