வியாழன், 5 செப்டம்பர், 2019

ஒரு 100 -ரூபாய் திருடியதாக.. பெண் கைது!!

தூத்துக்குடி
புதுக்கோட்டை காவல் நிலையம்

ஓட்டப்பிடாரம், தெற்கு ஆரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி பாக்கியலட்சுமி(59).

இவர் 04.09.2019 அன்று புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று  கொண்டிருந்தார்.‌

*அப்போது அங்கு இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியைச் சேர்ந்த தங்கமணி மனைவி சாந்தி(50) என்பவர் பாக்கியலட்சுமியின் கைப்பையில் இருந்த 100/- ரூபாய் பணத்தை திருடியுள்ளார். அப்போது சாந்தி கையும் களவுமாக பிடிபட்டார்.*

* இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா Cr. No 262/19 u/s. 379 IPC (Pickpocket) ன் கீழ் வழக்கு பதிவு செய்து சாந்தியை கைது செய்தார்.


Next News

*தூத்துக்குடி மாவட்டம் :05.09.2019*

 கயத்தாறு காவல் நிலையம்*

கயத்தாறு, நாகலாபுரம் ஊரைச் சேர்ந்தவர் வெயில் காளை மகன் பாபநாசம்(35). இவருடைய சகோதரரின் மகளிடம் சூரிய மினுக்கம் பகுதியைச் சேர்ந்த வெயில் முத்து மகன் முத்துக்குமார்(25) என்பவர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.*

 இதுகுறித்து பாபநாசம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் 04.09.2019 அன்று பாபநாசத்தை தவறாக பேசிய தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.*

*இதுகுறித்து பாபநாசம் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் Cr. No 194/19 U/s 294(b), 506(ii) IPC & 4 of TNPHW Actன் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக