சனி, 24 ஆகஸ்ட், 2019

மத்திய - மாநில அரசுக்கு ஆதி தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்ே கோரிக்கை!!!

ஆதிதமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன்  
தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பு!!!
- மாநில அரசுகளுக்கு
கோரிக்கைகள்

1) அருந்ததியர் மக்களுக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக
உயர்த்திட வேண்டும்,
2) அரசியல் துறையிலும் அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
3) உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற
வேண்டும்.
4) காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 370-பிரிவினை நீக்கம்
செய்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்.
5) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு நீர் நிலைகளை
தூர்வாருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய கல்விக்கொள்கை-வரைவு அறிக்கை
RSS-ன் கொள்கை அடிப்படையில் உள்ளது. மேலும் முதலாளிகளுக்கும்,
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளது. ஆகவே,
இக்கல்விக் கொள்கை வரைவினை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- சாதி ஆணவப் படுகொலைகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்
நடைபெற்றுள்ளது என மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது. இத்தகைய
படுகொலைகளைத் தடுக்க உடனடியாக அவசரச்சட்டம் ஒன்றை இயற்று
வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் மாதம் முழுவதும்
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் தழுவிய அளவில் கண்டன
ஆர்பாட்டங்கள் நடத்துவது எனவும் இதன்மூலம் அறிவிக்கப் படுகிறது.
இவ்வாறு
செய்தியாளரிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக