வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

8 ரவுடிகள் கைது - தூத்துக்குடியில் காவல்துறை அதிரடி !!!

தூத்துக்குடி மாநகரில் 8 ரவுடிகள் கைது - காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை.


தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் இன்று கைது.

தூத்துக்குடி சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேசு பர்னாந்து மகன் ஜெகன் என்ற பில்லா ஜெகன்(44) என்பவர் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடிதனத்தில் ஈடுபட்டு தகராறு செய்தமைக்காக தூத்துக்குடி வடபாகம் போலீசார் இன்று கைது செய்தனர்.

முத்தையாபுரம் பாரதி நகர் 1வது தெரு சேர்ந்த ஜோசப் மகன் கபில் என்ற கபில்தேவ்(27) என்பவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு தகராறு செய்தமைக்காக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடி, வெள்ளப்பட்டி, கெபித் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் மகன் விமல்ராஜ்(35) என்பவர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு தகராறு செய்தமைக்காக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவ இரக்கம் மகன் ஞானதிரவியம்(36) மற்றும் தூத்துக்குடி சேதுராஜா தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து(42) ஆகிய இருவரும் வடபாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்து தகராறு செய்தமைக்காக வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.*

தூத்துக்குடி ராஜீவ் நகர் 2-வது தெருவை சேர்ந்த அன்னாவி மகன் பாக்கியராஜ் என்ற மாரிஜெயம்(38) என்பவர் மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனமாக செயல்பட்டமைக்காக மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவைச் சேர்ந்த பூல் என்பவரின் மகன் முத்துராமலிங்கம்(45) மற்றும் அவரது மைத்துனரான மருதநாயகம் மகன் சுடலைமுத்து(39) ஆகிய இருவரும் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்து தகராறில் ஈடுபட்டமைக்காக தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. காந்திமதி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

1 கருத்து:

  1. போன தடவை பில்லா ஜெகன் பிடிக்கும்போது அவர்களை கால் உடைந்துபோலீஸ்காரங்க கை தாங்களா கூட்டிட்டு வர்ற மாதிரி வீடியோவை போட்டாங்க கடைசில பார்த்தா போலீஸ்காரருக்கு அவர் 45 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து அந்த கொலையில் இருந்து விடுபட்டுள்ள ஆனால் இப்போது அடுத்த படம் இது உண்மையா தெரியவில்லை ஆண்டவனுக்கே வெளிச்சம்

    பதிலளிநீக்கு