தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மே, 2026

புதிய தலைமுறை சேனல் முடக்கம்? பரவும் தகவல் தவறு! பின்னணி என்ன?அவதூறு ஊடகங்கள் மீது நடவடிக்கை தேவைதமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் தலைவர் பரபரப்பு அறிக்கை,

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி:

சென்னை மே29 

"புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு முடக்கியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது. ஊடகங்கள் தங்களின் பரபரப்புக்காக உண்மைகளைத் திரித்து பொய்ச் செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சிவதமிழவன் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை....

 

thoothukudileaks

நடந்தது என்ன?

"இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் உண்மைச் செய்திகளை திரித்து, வெறும் பரபரப்புக்காக பொய்ச் செய்திகளையே ஒளிபரப்பி வருகின்றன. ஒரு புதிய அரசு அமைந்து வெறும் 18 நாட்களுக்குள், பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வள ஊழல்களைக் கண்டறிந்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

> நேற்றுகூட திருச்செந்தூர் கோவில் காவலர்கள் மற்றும் தீட்சிதர்கள் லஞ்சம் வாங்கிய புகாரில், சம்பந்தப்பட்ட 4 பேரையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதான் கள நிலவரம்."

thoothukudileaks


அவதூறு ஊடகங்கள் மீது நடவடிக்கை தேவை

இந்த உண்மைகளைத் திரித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர், பரபரப்புக்காக முந்திக்கொண்டு அவதூறு செய்திகளைப் பரப்பும் எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், அவற்றை தயவுதாட்சண்யமின்றி முடக்க அரசு தயங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

thoothukudileaks


 ஊடக தர்மம் காப்பாற்றப்பட வேண்டும்

"பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் என்று ஒரு சுய கட்டுப்பாடு தேவை. அது தற்போதைய தமிழகத்திற்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. உண்மையில் தவறு செய்யும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது நீதிமன்ற ரீதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பத்திரிகை மற்றும் ஊடக தர்மம் காப்பாற்றப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியாயத்தின் பக்கம் என்றுமே.. தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் உறுதியோடு நிற்கும். பொதுமக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

— மு.சிவதமிழவன் மாநிலத் தலைவர்,

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன், தலைமையகம்.