புதன், 25 நவம்பர், 2026

தூத்துக்குடி பிரபல தொழிபதிபருக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை!

Tamil Nadu updates

தூத்துக்குடி:நவ 26

 தூத்துக்குடியில் பிரபல கல்வி நிறுவனமான விகாசா பள்ளியின் தலைவரான P.S.T.S. வேல்சங்கருக்கு, காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் காசோலை மோசடி thoothukudileaks


தூத்துக்குடி பக்கிள்புரத்தைச் சேர்ந்த ராமலிங்க நாடார் மகன் விஜயராகவனிடம் இருந்து, மில்லர்புரம் மேற்கு மெயின் ரோட்டில் இயங்கி வந்த M/S. P.S.T.S. திரவியரத்தினம் அண்ட் சன்ஸ் என்ற கூட்டாண்மை நிறுவனம் ரூ.6 லட்சம் கடனாகப் பெற்றுள்ளது. பின்னர் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலைகள் பணமின்றித் திரும்பியதாகக் கூறப்படுகிறது.


இதையடுத்து விஜயராகவன், சம்பந்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு எதிராக தூத்துக்குடி விரைவு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் S.T.C. எண். 268/2022 என்ற வழக்கைத் தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனத்தையும் அதன் பங்குதாரரான P.S.T.S. வேல்சங்கரையும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்தது.


இதனைத் தொடர்ந்து, P.S.T.S. வேல்சங்கருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன், புகார்தாரருக்கு ரூ.6 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 11.11.2026 அன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் பிரபலமான விகாசா பள்ளியின் தலைவராக P.S.T.S. வேல்சங்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக