Tamil Nadu updates
தூத்துக்குடி: நவ26
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா, மொடக்குறிச்சி, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, சேதப்படுத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அதிர்ச்சியையும், திமுகவினரிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிலைகளைத் திட்டமிட்டு தாக்கிய மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து, இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சமூக விரோதக் கும்பல்களுக்கு காவல்துறை மீதான பயம் நீங்கிவிட்டதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனை உணர்ந்து த.வெ.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக