Tamil Nadu updates
தூத்துக்குடியில் நூறு பவுன் தங்க நகை கொள்ளை முயற்சி நகை அடகு கடையின் மேற்கூரையை சேதப்படுத்தியதாக இருவர் மீது புகார்! ரூ.5 லட்சம் நகைக்கடையின் இழப்பு எனக் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை என தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி, நவ.27:
தூத்துக்குடியில் நகைக்கடையின் மேற்கூரையை துளையிடும் இயந்திரம் மூலம் சேதப்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் அளித்த புகாரின்படி, தூத்துக்குடி திம்மையா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அவரது நகைக்கடையில் கடந்த 20.11.2026 அன்று இரவு சுமார் 8.30 மணியளவில் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டூவர்ட் சாம்சன் அரோக்கியசாமி, முருகேசன் ஆகிய இருவர் கடையின் மேற்கூரையை துளையிடும் இயந்திரம் மூலம் சேதப்படுத்தியதாகவும், இதனால் கடைக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 1113/2026 என்ற எண்ணில், தமிழ்நாடு சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டம் 1992-ன் பிரிவு 3(1)-ன் கீழ் கடந்த 20.11.2026 அன்று இரவு 9.15 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நூறு பவுன் தங்க நகை கொள்ளை முயற்சி தப்பியதாக பரபரப்பு பேட்டி
இந்நிலையில் . . . .
, இன்று 27-11-2026 தூத்துக்குடி செய்தியாளரிடம் பேட்டியளித்த புகார்தாரர்,
நூறு பவுன் தங்க நகை கொள்ளை முயற்சி நல்ல வேளை தப்பியதாகவும் ....
சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், நகைக்கடையை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புகார்தாரரின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக