செவ்வாய், 1 செப்டம்பர், 2026

காவல்துறையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை! புகார் அளிக்க தனி கைபேசி/WhatsApp எண்கள் முழு விவரம்

Tamil Nadu updates, photo news by Arunan Reporter 

காவல்துறையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை!


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்கள், மாநகர காவல் ஆணையரகங்களிலும் ‘Internal Vigilance Cells’ – புகார் அளிக்க தனி கைபேசி/WhatsApp எண்கள் அறிவிப்பு...


தூத்துக்குடி, செப்.1:

தமிழ்நாடு காவல்துறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் ‘Internal Vigilance Cells’ (உள்நாட்டு விழிப்புணர்வு பிரிவுகள்) அமைக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரிவுகளின் முக்கிய நோக்கமாகும்.

thoothukudileaks


புகார் அளிக்க தனி கைபேசி, WhatsApp எண்கள்


பொதுமக்கள் எளிதாக புகார் தெரிவிக்கும் வகையில் மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக Internal Vigilance Cell கைபேசி/WhatsApp எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு நேர்ந்த காவல்துறை சார்ந்த ஊழல் அல்லது முறைகேடுகள் குறித்து இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்.


தூத்துக்குடி மாவட்டத்திற்கான Internal Vigilance Cell தொடர்பு எண்:

📱 9489929270


புகார்தாரர், சாட்சிகளின் அடையாளம் ரகசியம்


புகார் அளிக்கும் பொதுமக்கள் மற்றும் புகாருக்கு ஆதாரமாக இருக்கும் சாட்சிகளின் அடையாளங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மேலும், பெறப்படும் ஒவ்வொரு புகாரும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தேவையான விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் தங்கள் குறைகளை அச்சமின்றி தெரிவிக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட பத்திரிகை வெளியீடு எண்: 59/2026 | தேதி: 19.08.2026


“காவல்துறையில் ஊழலுக்கு ‘செக்’! தமிழகம் முழுவதும் Internal Vigilance Cells – புகார் அளிக்க தனி WhatsApp எண்கள்!”


மாநகரம்/மாவட்டம் வாரியான Internal Vigilance Cell


கைபேசி /வாட்ஸ்அப் எண்கள்


மாநகரம்/மாவட்டம்


சென்னை மாநகரம்


கைபேசி/வாட்ஸ்அப் எண்கள்


7871723000


2


தாம்பரம் மாநகரம்


6374514428


3


ஆவடி மாநகரம்


9840018110

4

சேலம் மாநகரம்


9626207262


5


திருப்பூர் மாநகரம்


8438761616


6


திருச்சிமாநகரம்


7871202100


7


மதுரை மாநகரம்


8300021100


8


கோயம்புத்தூர் மாநகரம்


8148919100


9


திருநெல்வேலி மாநகரம்


9052540100


10


காஞ்சிபுரம்


9040031700


11


செங்கல்பட்டு


9500779100


12


திருவள்ளூர்


9498181359

13

விழுப்புரம்


9944889161

14

கள்ளக்குறிச்சி


8870353790


15


கடலூர்


9677100551


16


வேலூர்


8807258532


17


இராணிப்பேட்டை


7305877732


18


திருப்பத்தூர்


9600903373


19


திருவண்ணாமலை


7896878100


20


திருச்சி


7448878100


21


புதுக்கோட்டை


9500550543


22


கரூர்


8807709299


23


பெரம்பலூர்


8903631122


24


அரியலூர்


7904832100


25


தஞ்சாவூர்


9840438678


20


திருவாரூர்


9944336551


27


நாகப்பட்டினம்


9489901105


28


மயிலாடுதுறை


9087755100


29


கோயம்புத்தூர்


7540083100


30


ஈரோடு


9655220100


31


திருப்பூர்


9042227100


32


நீலகிரி


9789800100


33


சேலம்


9629390203


34


நாமக்கல்


9566637105


35


தருமபுரி


760-4904492


36


கிருஷ்ணகிரி


9025552100


37


மதுரை


9003719004


38


விருதுநகர்


9600975100


39


திண்டுக்கல்


7904300491


40


தேனி


9626207262


41


இராமநாதபுரம்


7904114100


42


சிவகங்கை


7598788108


43


திருநெல்வேலி


9498101740


44


தென்காசி


9385678039


45


தூத்துக்குடி


9489929270


46


கன்னியாகுமரி


7358776100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக