வெள்ளி, 18 செப்டம்பர், 2026

கொலை வழக்காக மாற்றக் கோரிக்கை வாலிபர் அடித்துக் கொலை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

கொலை வழக்காக மாற்றக் கோரிக்கை வாலிபர் அடித்துக் கொலை  குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், வழக்கைக் கொலை வழக்காக மாற்றக் கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தாய் மனு அளித்துள்ளார்.


thoothukudileaks


சம்பவ பின்னணி: புதுக்கோட்டை, மேலச் செய்த்தலை பகுதியைச் சேர்ந்த திருமதி சின்னம்மாள் அவர்களின் மகன் கணேசன் (51/26), கடந்த 13.09.2026 அன்று இரவு இரும்புக் குழாய் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் மர்ம நபர்களால் தாக்கப் பட்டார். இதில் தலை, முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி (BNS பிரிவு 109(1)) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழப்பு & உறவினர்கள் கொந்தளிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், கணேசனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தாயாரின் கோரிக்கைகள்: பாதிக்கப்பட்ட தாய் சின்னம்மாள், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்களிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

  • கொலை வழக்காக மாற்றம்: கொலை முயற்சி வழக்கை உடனடியாகக் 'கொலை வழக்காக' (Murder Case) மாற்றம் செய்ய வேண்டும்.
  • தனிப்படை அமைப்பு: தலைமறைவாக உள்ள உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யத் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்க வேண்டும்.
  • ஆதாரங்கள் பாதுகாப்பு: சம்பவ இடத்திலுள்ள CCTV காட்சிகள், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும்.
  • காவல்துறைப் பாதுகாப்பு: சாட்சிகளுக்கும், எங்களது குடும்பத்தினருக்கும் எதிரிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  • அரசு நிவாரணம்: மகனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அரசின் சார்பில் உடனடி நிவாரணமும், பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உரிய இழப்பீடும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையின் அலட்சியம் குறித்து உரிய ஆய்வு செய்து, வழக்கில் விரைந்து நீதி கிடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக