தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஜோசப் விஜயை கண்டித்து திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி, செப்.12:
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆணவமாக பேசியதாகவும், சட்டமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி, அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி 12-வது மையவாடி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் இன்று (12.09.2026) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார் அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில்...
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கோவில் பட்டி கருணாநிதி எம்எல்ஏ விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீடியோ பார்க்க
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராகவும், சட்டமன்றத்தில் அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளை கண்டித்தும் பதாகைகள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக