தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிறுவனங்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்
செப்டம்பர் 30-க்குள் செலுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்
தூத்துக்குடி, செப்.9:
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தொழில்வரி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ன் பிரிவு 117-B மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன் விதி 275(2)-ன் படி, மாநகராட்சி எல்லைக்குள் எந்தவொரு தொழில், வர்த்தகம், வணிகம் அல்லது வேலையில் ஈடுபடும் நபர்களிடமிருந்து தொழில்வரி வசூலிக்கப்படுகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அரையாண்டு வருமானத்திற்கு ஏற்ப தொழில்வரி
| வரிசை | அரையாண்டு வருமானம் | தொழில்வரி |
|---|---|---|
| 1 | ரூ.21,000 வரை | இல்லை |
| 2 | ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை | ரூ.159 |
| 3 | ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை | ரூ.402 |
| 4 | ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை | ரூ.791 |
| 5 | ரூ.60,001 முதல் ரூ.75,000 வரை | ரூ.1,192 |
| 6 | ரூ.75,001 மற்றும் அதற்கு மேல் | ரூ.1,250 |
செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும்
பிடித்தம் செய்யப்பட்ட தொழில்வரியை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தொழில்வரியை பிடித்தம் செய்து செலுத்தத் தவறினால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 ஆகியவற்றின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
—

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக