திங்கள், 31 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி டேவிஸ்புரம் ஜங்ஷனில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி டேவிஸ்புரம் ஜங்ஷனில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி, ஆக.31:
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டேவிஸ்புரம் ஜங்ஷன் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

thoothukudileaks


தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் கலைமணி (24), கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிராஜா (22) மற்றும் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ் என்ற கார்த்திக் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக