தூத்துக்குடி, ஏப்ரல் 20:
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாதவர்களும், அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரலாம்:
ஆதார் அட்டை
ரேஷன் அட்டை
100 நாள் வேலைத் திட்ட (MNREGA) அடையாள அட்டை
பாஸ்போர்ட்
பான் கார்டு
ஓட்டுநர் உரிமம்
வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகம்
மருத்துவ காப்பீடு அட்டை
ஒன்றிய / மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன (PSU) அடையாள அட்டை
எம்.பி / எம்.எல்.ஏ அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
வருகின்ற தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026
மேலும், வாக்களிக்க விரும்பும் அனைவரும் சமீபத்திய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையான ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகங்கள் மற்றும் உதவிக்காக தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா உதவி எண் 1950-ஐ தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக