செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் மனு!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பா.ஜ.க. மனு!

தூத்துக்குடி, பிப். 18:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மீட்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி -ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிறுவர் பூங்கா இடத்தில் ஆக்கிரமிப்பு:

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிதேலிஸ் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

தூத்துக்குடி மாநகராட்சி 47-வது வார்டு, லயன்ஸ்டவுன் ரோச் காலனி 4-வது தெருவில் சிறுவர் பூங்கா அமைய வேண்டிய இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு கார் பார்க்கிங் மற்றும் மீன் கம்பெனி அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அந்த இடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

thoothukudileaks

வீடியோ பார்க்க 

தொடரும் ஆக்கிரமிப்புகள்:

அதேபோல், ரோச் நகர் 2-வது தெருவில் தனியார் ஹோட்டல் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி இடத்தையும், ரோச் காலனி 3-வது தெரு முதல் 6-வது தெரு வரை உள்ள 40 அடி அகலச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

thoothukudileaks

thoothukudileaks


பாஜக வழக்கறிஞர் பிதேலிஸ் பரபரப்பு பேட்டி 

சமூக நலக் கூடம் அமைக்க கோரிக்கை:

ரோச் காலனி 2-வது தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஒரு சமூக நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும். மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் எங்கெங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி, அந்த இடங்களை மீட்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

​இந்தக் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக