தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் அமெரிக்காவில் ஏற்பட்ட பனிச்சறுக்கு (ஸ்கீயிங்) விபத்தின் விளைவாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவராகவும், குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் அக்னிவேஷ் அனில் அகர்வால் (49) பணியாற்றி வந்தார்.
இறப்பு !!!
அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவர், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகன் மறைவால் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ள வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்,
"தன் குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய ஒரு பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு மகன் தன் தந்தைக்கு முன்பாகப் பிரிந்து செல்லக்கூடாது. இந்த இழப்பு எங்களை நாங்கள் இன்னும் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நொறுக்கிவிட்டது"
என தனது வேதனையை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
இந்த திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
✍️ தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக