தூத்துக்குடி லீக்ஸ் — செய்தி
photo news by Arunan journalistt
தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர் முகாம்
தூத்துக்குடி டிச :3
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று (03.12.2025) புதன்கிழமை வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் சிறப்பாக நடைபெற்றது.
முகாமில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் குடிநீர் குழாய் பழுது, பாதாள சாக்கடை அடைப்பு, தெருவிளக்கு வேலை செய்யாதது, சாலைகள் சேதம், சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகள் பொதுமக்களிடமிருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன.
முன்னதாக மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து இடையூறு விளைவிக்கும் மாடுகள் விதிகளில் சுற்றி திரிவதை பிடித்தல் விஷயத்தில் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் மற்றும் மழை நீர் அகற்றல் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.என்றார்.
மேலும் மேயர் ஜெகன் பெரியசாமி வடக்கு மண்டல மாநகராட்சி
அதிகாரிகள் இடம் ஒவ்வொரு குறையும் பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு பொறுப்பான துறைகளுக்கு திடீர் அறிவுறுத்தல்கள் வழங்கினர்.
நீண்டகாலத் திட்டமிடல் தேவைப்படும் கோரிக்கைகளுக்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் “நேரடியாக அதிகாரிகளிடம் நமது பிரச்சினையை சொல்லிக் கொள்ளும் வாய்ப்பை அளித்ததற்கு மகிழ்ச்சி” என தெரிவித்தனர்.
மாநகராட்சி சார்பில், குறைகள் அனைத்தும் விரைவில் தீர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக