தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (08.10.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது. வடக்கு மண்டல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றனர்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் முக்கியமாக சொத்து வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், மற்றும் பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தம் ஆகியவையாகும்.
மொத்தம் 24 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் பெறப்பட்டன.
இம்முகாம் வழியாக பொதுமக்களின் குறைகள் விரைவாக தீர்க்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக