தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு வேலவன் ஹைப்பர் மார்க்கெட் அருகே செயல்படும் டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் சார்பில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை சங்க தலைவர் ராமர், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சந்தணராஜ், துணை பொருளாளர் பலவேசம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பூஜை நிறைவில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு, பொங்கல், சுண்டல், பொரி ஆகியன வழங்கப்பட்டன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக