வியாழன், 30 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை 2025 ல் இது வரை 21 கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது

தூத்துக்குடி, அக்.30:

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II இன்று தீர்ப்பளித்தது.

thoothukudileaks
ஆயுள் தண்டனை பெற்ற கணேசன் 

இது பற்றிய செய்தியாவது:-

ஏரல் அகரம் பகுதியைச் சேர்ந்த வீரமணியின் மகன் ஜெயராஜ் (68/19) என்பவரை, 2019-ஆம் ஆண்டு ஏரல் அகரம் வேதக்கோவில் தெருவில் வைத்து, முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் கணேசன் (61/25) கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா  இன்று குற்றவாளி கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர்  பட்டாணி, நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவிய தலைமை காவலர் அரவிந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. பாராட்டினார்.

2025ஆண்டு இது வரை 21 கொலை வழக்கு!!!

இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24X7 உதவி எண்/வாட்ஸ்அப்: 9514144100

செய்தி வெளியீடு எண்: 164 | தேதி: 30.10.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக