வியாழன், 11 செப்டம்பர், 2025

தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டம் : 11.09.2025

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது:

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில், வருகின்ற 17.09.2025 (புதன்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக, அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, குடிமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர்  சி.ப்ரியங்கா இ.ஆ.ப., அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி லீக்ஸ் 📰


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக