# Tamil Nadu updates, photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஆகஸ்ட் 29
தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் பி.எம். லால் மற்றும் துனை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பல முக்கியமான நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
## முக்கிய முடிவுகள்:
### 1. StartupTN திட்டத்திற்கான இடம் ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசின் StartupTN திட்டத்தின் கீழ், இளைஞர்களின் தொழில்முனைவோர் திறனை வளர்க்கும் நோக்கத்துடன் பொது நல்வாழ்வு சங்கத்தின் பழைய கட்டிடத்தில் உள்ள 4000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் மாத வாடகை ₹1,41,600 என்ற அடிப்படையில் ஒப்படைக்கப்படும்.
### 2. நகர்புற பங்கு சேவை திட்டம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தமிழ்நாடு நகர்புற பங்கு சேவன், கோவையின் ₹6 கோடி பங்கு தொகைக்கான செலவை மாநகராட்சி பொது நிதியில் இருந்து ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டது.
### 3. கட்டுமான பணிகள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பாதைகளில் ஜல்லி கல் மேற்பூச்சு பணிக்கு M/s. Raj Engineering, Thoothukudi நிறுவனத்தின் ₹27,64,585 மதிப்பிலான ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
### 4. சாலை அமைப்பு திட்டம்
₹14.70 கோடி மதிப்பில் 253 புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்திற்கு TUFIDCO-வில் இருந்து ₹5 கோடி கடன் பெற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
### 5. கடை வாடகை திரும்பப் பெறுதல்
பல்வேறு வணிக வளாகங்களில் கடை நடத்தியவர்களின் வாடகை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் ஆராயப்பட்டு, மொத்தம் ₹19,17,738 திரும்பப் பெற வேண்டிய தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.
### 6. ஒப்பந்த விகித அதிகரிப்பு
M/s. Our Land Engineering Works Pvt Ltd நிறுவனத்திற்கான பணி விகிதம் ₹4375-ல் இருந்து ₹4812 ஆக அதிகரிக்கப்பட்டது.
## கவுன்சில் தலைவர் கருத்து:
"இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாநகராட்சியின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்கும் பெரிதும் உதவும்" என மாநகராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தார்கள்.
இந்த முடிவுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கோபமாகி விட்டாரா ஆணையர்!???
நேற்று தமிழக அரசு தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் ஆக பிரியங்கா ஜ ஏ எஸ் என அறிவித்தது
கடந்த ஜுன் மாதம் தான் இப்போது உள்ள ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆக பதவி வந்தார்
பதவி வந்து மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் சென்னை க்கு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை க்கு தூக்கியடித்து இருப்பதால் மிகவும் அப்செட் ஆனார் மாமன்ற கூட்டத்திலும் பேசாமல் அப்செட்டாக அமர்ந்து இருந்ததை காண முடிந்தது.
சால்வை அணிவித்திட பலர் முற்பட்ட போதும் படு வேகமாக மாடி படிக்கட்டு வழியாக கிளம்பி விட்டார் வழக்கமாக லிஃப்ட் பயன் படுத்துவாராம்
அவர் பின்னாலே ஆணையரின்
பி ஏ க்கள் பின் தொடர்ந்து ஓடினர்.
கடந்த சில நாட்களாகவே.. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து நிகழ்ச்சியில் வராமல் இருந்ததாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
---





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக