வியாழன், 24 ஜூலை, 2025

பராமரிப்பற்று இருளில் தொலைந்த தூத்துக்குடி வட்ட தெப்பம் பூங்கா! தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

📍பராமரிப்பற்று இருளில் தொலைந்த தூத்துக்குடி வட்ட தெப்பம் பூங்கா!


தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள வட்ட தெப்பம் பூங்கா, தற்போது பராமரிப்பின்றி கிடந்து மக்களின் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.



பூங்காவில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கிணறு பாசியால்  கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. இது அருகிலுள்ள பகுதிகளில் நோய்கள் பரவக்கூடிய நிலையை உருவாக்கி உள்ளது.



அதேவேளை, பூங்காவில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங்கில் குடிநீர் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டாலும், அங்கு குடி தண்ணீர் இல்லாமல் உள்ளது 

அடுத்து பதியப்பட்ட வாஷ் பேசின்  செயலிழந்த நிலையில் உள்ளது. 

அதாவது கை கழுவும் வசதி இல்லாமல், முற்றிலும் பயன்படாத நிலையில் உள்ளது.

வீடியோ பார்க்க...


பூங்கா அருகாமையில் குடிநீர் வசதி இல்லாததாலும், சுற்றுச்சூழல் சீர்கேடும், சுகாதாரமற்ற சூழலும் பொதுமக்களில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி யில்!!!!


ராவ் பகதூர் குருஸ் ஜயா சிலையை சுற்றி உள்ள அப் பகுதியில் ஒரு தனிப்பட்ட நிறுவனங்களே வியாபித்து ஆக்டோபஸாக மாறியுள்ளது 


போக்குவரத்து நெரிசலை பெருமளவு ஏற்படுத்தும் வேலவன் ஹைப்பர் மார்க்கட் வேலவன் ஸ்டோர் வேலவன் ஜவுளிகள் கடை நடத்தி வேலவன் ஸ்டோர் நிறுவனமே தூத்துக்குடி மாநகராட்சி வட்ட தெப்பம் பூங்கா பராமரிப்பு செய்கிறதாம்...????



இதுவும்  தூத்துக்குடி சிவன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்த விவகாரம் வெளிவந்தது போல பின்னாளில் ஆக்டோபஸ் இடம் போய் விடலாம்.என விவரமறிந்தவர்கள் பேசுகின்றனர்.


பொது மக்களின் கோரிக்கை:

வட்ட தெப்பம் பூங்காவை முறையான பராமரிப்புடன் சீரமைத்து, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக