தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
02.07.2025 | தூத்துக்குடி புகைப்படங்கள் செய்தி அருணன்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காண்பதற்காக புதன்கிழமை தோறும் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (02.07.2025) புதன்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
மேயர் ஜெகன் பெரியசாமியின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், அண்மையில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள பானோத் ம்ருகேந்தர் லால் சிறப்பாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இன்றைய முகாமில் மொத்தம் 46 மனுக்கள் பெறப்பட்டு, அவை உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குப் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் இந்த முயற்சி தொடரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக