Tamil Nadu updates,
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடி:மே 4
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் தளபதியார் விஜய் ஆணையின்படி, கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் தலைமையில், 7-வது வார்டுக்குட்பட்ட லூர்தம்மாள் புரம் பகுதியில் கோடைக் காலங்களில் மக்களின் தாகம் தீர்க்கும் நோக்கில், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கழகத் தோழர்கள் அகிலன், செந்தில், ராஜேந்திரன், ஜெயபால், கண்ணன், ஆதி, சண்முகம், செல்வம், சுரேஷ் உள்ளிட்ட பலர் தீவிர பங்களிப்புடன் பணியாற்றினர். சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பந்தல் சேவையால் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் கழகத் தோழர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பொதுமக்களுக்கு குளிர்ந்த நீர், மோர், தர்ப்பூசணி, சர்பத், ரோஸ்மில்க், வாழைப்பழம் போன்ற சுவையூட்டும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறுவர் முதல் முதியோர் வரை பலரும் இந்த சேவையினால் பயனடைந்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன.
இந்த நிகழ்வை ஒட்டி, கழகத்தினரின் ஒற்றுமையும் சமூகப் பொறுப்பும் வெளிப்படையாகக் காணப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக