சனி, 10 மே, 2025

தூத்துக்குடியில் சிவன் கோவில் தேரோட்டம்: மேயர் ஜெகன்பொியசாமி அன்னதானம் தொடக்க விழா

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 


தூத்துக்குடியில் சிவன் கோவில் தேரோட்டம்: மேயர் ஜெகன்பொியசாமி அன்னதானம் தொடக்க விழா

தூத்துக்குடி, மே 10:
தூத்துக்குடி பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்வாகிய தேரோட்டம் நடைபெற்றதிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.



தேரோட்டத்தை அடுத்து, கோவில் வளாகத்தின் பின்புறத்தில் பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


 இந்த அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர்  ஜெகன்பொியசாமி சமபந்தி பொது மக்களுக்காக தொடங்கி வைத்தார். 

அன்னதானம் தொடங்கி வைத்த மேயர் ஜெகன் 


இதன்போது சுமார் 5,000 பேர் வரை உணவளிக்கப்பட்டது.


மேயர் ஜெகன்பொியசாமி பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். 


கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான அர்ச்சனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் சதிஷ்குமார், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், கவுன்சிலர்கள் சரண்யா, பேபி ஏஞ்சலின், ஜெயசீலி, லாரி புக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், தொழிலதிபர் கமலஹாசன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கீதா செல்வமாரியப்பன், ராஜுபட்டர், மகளிர் அணி துணை அமைப்பாளர் சந்தனமாரி, வியாபாரிகள் சங்க தலைவர் சுப்பையா, முன்னாள் கவுன்சிலர் பொியசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், கருப்பட்டி பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக