---
முன்னாள் அமைச்சர் முனுசாமி- ஜெயகுமார் ஆகியோரை கண்டித்து கண்டன அறிக்கை
அறிக்கை வெளியிடுபவர்: N. இராமகிருஷ்ணன்,
டூவிபுரம், 2வது தெரு,
தூத்துக்குடி – 3.
நாள்: 07.04.2025
அதிமுக கட்சியின் உண்மையான தொண்டனும், தொலைநோக்கு பார்வையுடைய தலைவரும், மக்கள் நலனுக்காக அரசியலில் ஈடுபடுபவரும், மனிதநேய பணிகளில் முனைப்புடன் செயல்படுபவரும் ஆகிய பெருமைகளை கொண்டவர் சைதை துரைசாமி.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழியிலும், புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் வழிகாட்டுதலிலும் கடந்த சில தசாப்தங்களாக கட்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். "நேற்றும், இன்றும், நாளையும்" என்ற அறக்கட்டளை மூலம் ஏழைத் தாய்மார்களின் வாழ்வில் நம்பிக்கையையும், நலம் தரும் பண்பையும் விதைத்து வருகின்றார்.
அவரை சைதை துரைசாமி எனத் தமிழக மக்கள் அறியச் செய்தது எம்.ஜி.ஆரும், அம்மா ஜெயலலிதாவும் தான்.
கொளத்தூர் தொகுதி யில் திமுக ஸ்டாலின் எதிர்த்து நின்றவர்!!!
கொளத்தூரில் சிலர் அவர் மீது குவித்த அழுத்தங்களையும், துரோகங்களையும் தாண்டி, தளராமல் தைரியமாக திகழ்ந்தவர்.
தற்கால அரசியல் சூழலில் கூட, ஸ்டாலின் அரசை எதிர்த்து எளிதில் அசையாமல் நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பதவிக்கு வேட்டு வைத்ததோடு, அம்மா உத்தரவை மீறி செயல்பட்டவர்களும், பா.ம.கவுக்கு தங்களால் ஆதரவு வழங்கியவர்களும் இன்று சைதையாரை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது.
அதேபோல், O.P.S அணியில் பணம் கேட்டும் தோல்வி கண்ட சிலருக்கு, சைதை துரைசாமியை விமர்சிக்கும் உரிமையே இல்லை.
எனவே, சைதை துரைசாமியை குறை கூறும் எவரையும் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது எனது முழுமையான நம்பிக்கையும் ஆதரவும் தொடரும்.
இப்படிக்கு,
N. இராமகிருஷ்ணன்
தூத்துக்குடி – 3
-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக