புதன், 30 ஏப்ரல், 2025

தூத்துக்குடியில் இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணி ஓய்வு!


தூத்துக்குடியில் இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணி ஓய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில், 36 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையினை வழங்கிய இரு துணைக் கண்காணிப்பாளர்கள் இன்று பணி ஓய்வு பெற்றனர்.





மாவட்ட குற்றப்பிரிவு-II காவல் துணை கண்காணிப்பாளர்  சிவராஜ்பிள்ளை மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர்  சந்தனக்குமார் ஆகியோர் 1988ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.


 இந்நிலையில் இன்றுடன் (30 -4-2025)அவர்கள் காவல் பணி நிறைவு பெற்றுள்ளனர்.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பணி நிறைவு வாழ்த்துத் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி.மதன், துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜு மற்றும் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக