Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி சாலை – கழிவு நீர் !
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி சாலைகளின் நிலையம் தினம் தினம் மோசமாகிக் கொண்டே செல்கிறது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பாலம் ஏறும் பகுதியில், சர்ச் எதிர்புறம் ஒரு வெள்ளை வேன் நிலைகுலைந்த சாலையில் டயர்கள் புதைந்து சிக்கித் தவித்து கொண்டு இருக்கிறது
கீழே அடியிலிருந்து பாதாள சாக்கடை உடைந்து கழிவு நீர் பெருக்கெடுத்து பிரதான சாலையெங்கும் ஓடுகிறது.
![]() |
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பாலம் ஏறும் பகுதி ஸ்மார்ட் சிட்டி சாலை |
இன்று 10-3-2025மாலை 5 மணி முதல் தொடரும் இந்த நிலைமை, பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. மூக்கு பிடித்தபடியே நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கழிவு நீர் தேங்கி, சுகாதாரச் சிக்கல்கள் உருவாகும் அபாயம் காணப்படுகிறது. கிருமி தொற்று அபாயம் ஏற்படும் முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
– தூத்துக்குடி லீக்ஸ் ஊடகம்
தேதி: 10-03-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக