வியாழன், 6 மார்ச், 2025

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

Tamil Nadu updates,7-3-2025

Photo news by sunmugasuthram Reporter 


தூத்துக்குடி, மார்ச் 7:

 தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி சார்பில் இன்று ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்பை கண்டித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றார்.


 "தமிழ் மொழியும், ஆங்கில மொழியும் தமிழகத்திற்கு போதுமானது" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து வரும் மார்ச் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதன் முன்னோட்டமாக, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனின் வழிகாட்டுதலின்படி, சிவன்கோவில் தேரடி பகுதியில் உள்ள வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


இந்த நிகழ்வில் மாநகர திமுக இளைஞர் அணி செயலாளர் அருண்சுந்தர், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், சண்முகபுரம் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


பொதுக்கூட்டத்தில் மேலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்க இந்த துண்டு பிரசுர விநியோகம் செய்யப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக