Tamil Nadu updates, 27-3-2025
photo news by Arunan journalist
தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் – பொதுமக்கள் கோரிக்கைகள் முன்வைப்பு
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று (27.03.2025) காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.
இம்முகாமில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தெற்கு மண்டல பகுதி கவுன்சிலர்கள் பால குருசாமி மற்றும் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றனர்.
இந்த குறை தீர்ப்பு முகாமில் மொத்தம் 43 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் முக்கியமான ஒன்றாக, தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ். நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் அதன் தலைவர் முத்து கிருஷ்ணன், மனு எண் 28 என வழங்கிய மனுவில் அங்கன்வாடி பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்யக் கோரிக்கை விடுத்தார்.
"தூத்துக்குடி மாநகராட்சி ஜே.எஸ்.நகரில் தெற்கு மண்டல அலுவலக வளாகத்திற்குள் அங்கன்வாடி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
அதில் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியை இல்லாமல் செயல்பட்டு வருகிறது."
கவலை அளிக்கிறது!!!
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- தூத்துக்குடி மாநகராட்சியின் ஜே.எஸ். நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
- இதனால் அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- நலச்சங்கம் சார்பில் பள்ளிக்குச் சிறு உதவிகள் வழங்கப்பட்டாலும், ஆசிரியர் இல்லாததால் பள்ளி இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
- அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பள்ளியில் மாணவர்கள் குறைவது கவலையளிக்கிறது.
- ஆசிரியர் நியமனம் செய்து பள்ளியின் தேவையான வசதிகளை மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் குறைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக