Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பி.எப். வட்டி தொகை வழங்கும் விழா நடைபெறுகிறது .
தூத்துக்குடி, பிப்ரவரி 15: தூத்துக்குடி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பி.எப். வட்டி தொகை வழங்கும் விழா வருகின்ற 17.02.2025 (திங்கள்) காலை 9.00 மணிக்கு மாநகராட்சி மாநாட்டு மையம், இரண்டாம் கேட் பாலம் அருகிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தலைமையேற்க உள்ளனர்.
பயனாளிகள் விழாவில் நேரில் கலந்து கொண்டு, தங்களுக்கு வழங்கப்படும் காசோலைகளை பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர் சங்கம், தூத்துக்குடி கிளை தலைவர் மாடசாமி, செயலாளர் சேவியர் மற்றும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக