வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் அதிமுக திண்ணை பிரச்சாரம்

முதல் நாள் திண்ணைப் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப். 21: தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு இன்று மாலை 5.30 மணிக்கு, அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.







இந்த முதல் நாள் திண்ணைப் பிரச்சாரத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.



 இதில், கட்சி நிர்வாகிகள், அம்மா பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.





பிரச்சாரத்தின் போது, அஇஅதிமுக அரசின் முன்னோக்கி நடைபோட்ட திட்டங்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள், தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை ஆகியவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





இதற்கான ஏற்பாடுகளை அம்மா பேரவை நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.


 மேலும், இதுபோன்ற திண்ணைப் பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி கிழமை தோறும் நடத்தப்படவுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக