சனி, 1 பிப்ரவரி, 2025

மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகக் கூட்டம்

Tamil Nadu updates,1-2-2025

தூத்துக்குடி: மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகக் கூட்டம் 31/01/2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் H.M. அகமது இக்பால் தலைமையில் தூத்துக்குடி நகரில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில், மமக மாவட்ட செயலாளர் அஸ்மத், தமுமுக மாவட்ட செயலாளர் யூசுப், மாவட்ட துணைத் தலைவர் ஜனோபர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர்மைதீன், செண்பகராஜ், ஆஷிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவை மற்றும் பொது நலக்கூட்டங்கள் நடத்த உத்தேசம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பின்வரும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன:


பிப்ரவரி 7, 2025 அன்று தூத்துக்குடி மாநகரில் தெருமுனை கூட்டம்.


பிப்ரவரி 9, 2025 அன்று தூத்துக்குடி மாநகரில் ரத்ததான முகாம்.


மானங்காத்தான் கிளை சார்பாக பொது மருத்துவ முகாம்.


ஏரல்நகர நிர்வாகம் சார்பாக, ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரைகள்.


காயல்பட்டினம் நகர நிர்வாகம் சார்பாக காயல்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு.



மேலும், தூத்துக்குடி மாநகரத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.


இந்த கூட்டத்தில் முக்கியமாக, மக்களின் நலன் கருதி பல்வேறு சமூக சேவை திட்டங்கள் எடுக்கப்பட்டது.


H.M. அகமது இக்பால்

மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, தூத்துக்குடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக