#40 ஆண்டுகால சேமநலநிதி வட்டி வழங்க மாமன்றம் ஒப்புதல்
Tamil Nadu updates, 1-2-2025
photo news by Arunan journalist
## தூத்துக்குடி மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கு நல்லதொரு செய்தி
தூத்துக்குடி, பிப். 1:
தூத்துக்குடி மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சேமநலநிதி வட்டி தொகையை ஓய்வூதியர்களுக்கு வழங்க மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1984-85 காலகட்டத்தில் தூத்துக்குடி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களின் சேமநலநிதிக்கான வட்டித் தொகை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஓய்வூதியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் வெற்றி பெற்றதை அடுத்து 78 பேருக்கு வட்டித் தொகை வழங்கப்பட்டது.
நேற்று (31.01.2025) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்ட அரங்கத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதி 156(1)ன் கீழ் நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர்கள் சங்க மாநகர தலைவர் இரா.மாடசாமி நன்றி தெரிவிப்பு!!!
இந்த முடிவை வரவேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் மதுபாலன் துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் கள் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகர தலைவருமான இரா.மாடசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
"கடந்த காலங்களில் பெரியசாமி, ஹென்றி டேனியல்ராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பல சேர்மன்களும், கஸ்தூரி தங்கம், சசிகலா புஷ்பா, சேவியர் அந்தோனி கிரேஸி போன்ற மேயர்களும், பல கமிஷனர்களும், ஆணையர்களும் பதவி வகித்தபோதும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."
1984 - 85 முதல் 2013 - 14 வரையிலான காலங்களில் நகராட்சி / மாநகராட்சிகளில் போதிய
தொகை இருப்பில் இல்லாத நிலையில் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சேமநல நிதி தொகை
உரிய அரசு தலைப்புகளில் செலுத்தப்டாமல் இருந்து வந்த நிலையில் அரசு தரப்பில்
செலுத்தப்பட்ட தொகைக்கு மட்டுமே வட்டி தொகை அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது .
நிர்வாக காரணங்களினால் ஏற்பட்டுள்ள இவ்வித்தியாச தொகை ரூ.4,19,51,765/- ஆனது மாநகராட்சியின்
பொது நிதியில் இருந்துதான் சரி செய்யப்படவேண்டிய நிலை உள்ளது .
மேற்காணும் சூழலில் மாநகராட்சி பொது நிதியில் போதிய தொகை இருப்பில் இல்லாததால்
இப்பொருள் தொடர்பாக இவ்வலுவலக கடிதம் எண் பி5/00629/2018 நாள்20.03.2019 ன் படி 1984–
85 முதல் 2005–06 வரையிலான காலம் வரைக்குமான ஓய்வூதியர்களுக்கு முதற்கட்டமாக
சேமநலநிதி வட்டிதொகை வழங்கிடும் பொருட்டு சிறப்பு நேர்வாக அரசிடமிருந்து ரூ.2,35,82,724/-
வழங்கிட கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் கடிதம் எண். 8740/2019/எல்ஏ3 நாள் 07.05.2019
ஆம் தேதிய கடிதத்தில் சிறப்பு நேர்வாக கருதி தாங்கள் கோரிய தொகையினை பகிர்ந்து அளிக்க
மாநில மற்றும் மத்திய நிதி ஆணையத்தின் விதிமுறைகளில் வழிவகை இல்லை.
ஆகையால்...
தாங்களே தங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் மாநில நிதிகுழு மானியத்திலிருந்து மேற்காணும்
தொகையினை ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள பணியாளர்களின் சேமநலநிதிக்கான வட்டி
தொகையினை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மேலே விவரிக்கப்பட்ட விபரப்படி 1984 - 85 முதல் 2013 - 14ம் நிதியாண்டு
வரையிலான வித்தியாச தொகை ரூ.4,19,51,765/- வழங்கப்பட வேண்டியுள்ளது.
முதற்கட்டமாக.....
ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருந்து சரியான விபரங்கள் பெறப்பட்டுள்ள 555
ஓய்வூதியதாரர்களுக்கு தொகை வழங்கிட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக