Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப்ரவரி 06, 2025
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக அவைத் தலைவர் பி.வி.தங்கமாரியப்பன் மற்றும் வர்த்தக அணி இணைச் செயலாளர் பி.எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் தூத்துக்குடி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றிய தங்கமாரியப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் சந்தனபட்டு, வட்ட கழக செயலாளர் கொம்பையா, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க தலைவர் ஐயப்பன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த அரசியல் இணைப்பானது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவின் அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக