வெள்ளி, 17 ஜனவரி, 2025

பொங்கல் விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

 # பொங்கல் விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

TamilNadu updates 

தூத்துக்குடி, ஜனவரி 18:

 பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரத்தின் 14-வது வார்டில் அமைந்துள்ள சின்னக்கண்ணுபுரம் பகுதியில் சிறப்பு விளையாட்டு போட்டிகள் மற்றும் திருவிழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.





இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. காளிதுரை, மகளிரணி நிர்வாகி திருமதி. மாரிச்செல்வி ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர். மேலும் வட்ட பிரதிநிதிகள் திரு. கோவிந்தராஜ், திரு. பழனிக்குமார், வட்ட இளைஞரணி பிரதிநிதிகள் திரு. கண்ணன், மோகன், சந்தோஷ் மற்றும் திமுக பிரமுகர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக