தூத்துக்குடி மாநகராட்சி 76வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
Tamil Nadu updates,
தூத்துக்குடி, 26 ஜனவரி:
நிகழும் திருவள்ளுவராண்டு 2056 தை மாதம் 13ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
மாண்புமிகு மேயர் பெ.ஜெகன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாநகராட்சியின் குடியரசு தின விழாவை நிகழ்த்தினார்.
இந்த சிறப்பு நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் (இ.ஆ.ப.) தலைமையேற்று நிகழ்வை வழிநடத்தினார்.
இந்த விழாவில் முக்கியமாக, தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் சேவைகள் பாராட்டப்பட்டு, நற்சான்றிதழ்கள் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் மதுபாலன் வழங்கினார்கள்.
மேலும், மழைக்காலத்தில் மக்களுடன் களப்பணியாற்றிய தூத்துக்குடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி, அவர்களை கெளரவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.
இந்த நிகழ்ச்சி, தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் திறன் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி செய்தது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக