Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடியில் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 22வது ஆண்டு விழா கோலாகலம்
தூத்துக்குடி, ஜன.28:
தூத்துக்குடி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 22வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டார்.
பள்ளி நிர்வாகக் குழுவினர் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் காரபேட்டை நாடார் மகமை விநாயக மூர்த்தி, காமராஜ் பெண்கள் கல்லூரி நிர்வாக அதிகாரி முத்துசெல்வம், காமராஜ் பள்ளி தாளாளர் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், அதிமுக நிர்வாகிகள் ஓட்டுரணி பெருமாள்சாமி, பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், எம்.ஜி.ஆர் மன்றத்தின் பெருமாள், தொழிற்சங்கத்தின் சுதாகர், இளைஞர் அணியின் மனுவேல், சிறுபான்மை பிரிவின் பிரபாகரன், வட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், திருச்சிற்றம்பலம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரி மற்றும் பள்ளி மகமை நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக