வியாழன், 19 டிசம்பர், 2024

தூத்துக்குடி ஜெ ஜெ, திருவிக நகர் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Tamil Nadu updates,

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி ஜெ ஜெ, திருவிக நகர் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மழைவெள்ள நீர் அகற்றும் பணியில் துரித ப்படுத்தி  வருகிறார்.


இதுபற்றி செய்தியாவது 


தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டின் ஜெ ஜெ நகர் மற்றும் திருவிக நகர் பகுதிகளில் குடிநீர் தேக்கம் மற்றும் வெள்ளநீர் அகற்றும் பணியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.



வெள்ளநீரை வெளியேற்ற ராட்சத மின்மோட்டார்கள் ஏற்பாடு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.


 அமைச்சருடன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் செல்வராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, மற்றும் வட்டப்பிரதிநிதிகள் மாரீஸ்வரன், மாரி, பாஸ்கர் 

பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 தூத்துக்குடி மாநகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக