Tamil Nadu updates,
முற்பகல் 11:12] 10-12-2024
அருணன் செய்தியாளர்:
அதானி ஊழல் மற்றும் மத்திய பாஜக அரசை எதிர்த்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி டிசம்பர் 10:
அதானி நிறுவனத்தின் ஊழல் செயல்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுவின் அழைப்பின் பேரில், 10/12/2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி நகரின் 12வது வாசல் மையவாடி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில்...
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் முக்கிய தோழர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பைக் கண்டித்து குரல் கொடுத்தனர்.
ஊழலற்ற ஆட்சி மற்றும் பொதுமக்களின் உரிமைகளுக்காக முன்னணி இயக்கங்கள் தொடர்ந்து போராடும் என்று பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் போக்கை கண்டிக்கும் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
கலந்து கொண்டோர்!!!
தலைமை தனலட்சுமி c.p மாநகர் செயலாளர்
சிறப்புரை c p மாவட்ட செயலாளர் கரும்பன் மற்றும் வேல்ராஜன் ஞானசேகர், பாபு பாலமுருகன் மாடசாமி கிருஷ்ண மூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை படுமோசமாக உள்ளதாக பேசினார்கள்!!!
ஆர்ப்பாட்டத்தில்...
தூத்துக்குடி மாவட்டம் பொறுத்த வரை காவல்துறை படுமோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு வைத்து பேசினார்கள்
இந்த ஆட்சிக்கு தான் கெட்ட பெயர் வாங்கி தருகிறார்கள் என்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக