Thoothukudi news,Tamil Nadu updates
Photo news by sunmugasuthram Reporter
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார்
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பெங்கல் புயலால் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிய வாகனத்தை மாநகர மேயர் ஜெகன் பொன்சாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில பாதிப்புகளை ஏற்படுத்திய பெங்கல் புயல் விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அந்தப் பகுதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டு உடனடி உதவிகளை வழங்கினர்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சியும் தங்களின் நிவாரண பணியை தொடர்ந்தது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பொறியாளர் சரவணன், நகர நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேயரின் துணை நிர்வாக அலுவலர்கள் மற்றும் பகுதிச் செயலாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக